
உன் மதம் எனக்கு வேண்டாம்
சம்மதம் மட்டுமே போதும்.
உன் சாதியும் தேவையில்லை
உன்னில் பாதி கொடு..
உன்ணப்பன் பணம் பெரிதல்ல
உன் குணம் இருக்கையில்.
சொத்துக்களும் தேவையில்லை
நீ எனக்கு செந்தமானால்.
செத்துப்போகவும் தோன்றாது
உன்னுடன் சோ்ந்து வாழ்கையில்.
சேர நினைக்கிறேன்.
என்னை சோ்த்துக்கொள்வாயா!
உன்னுள் வரத்துடிக்கிறேன்
என்னை வாரிக்கொள்வாயா!
உலகையே மறக்க நினைக்கிறேன்
உன்னுடன் சோ்கையில்.....
என்னை ஆமோதிப்பாயா - இல்லை
அவமதிப்பாயா காதலியே........!
காத்திருக்கிறேன் உன் வார்த்தைக்காக..
என் வாழ்க்கையை உன்னிடத்தில் தொலைக்க...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக