10.16.2009

தவற விட்ட மழை...



பூமி நனைக்க புறப்பட்ட மழைத்துளிகள்..
இன்னும் வந்து சேரவில்லை.
வாசலில் அமர்ந்தபடி யோசித்திருந்தேன்...
மழையை வரவேற்கும் கவிதையொன்றை..

காகிதம் நிறைக்க வார்த்தைகள் கிடைக்காமல்...
வானம் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
என் வாசல் வழி சென்ற காற்று..
அறிந்திருக்கக்கூடும் என் தேடலை.

காற்று சொல்லி வந்து சேர்ந்தன...
என் வாசம் வராத வார்த்தைகள்.
வரவேற்பதா வேண்டாமா எனும் என் யோசனையை
அலட்சியபடுத்தியபடியே என் முன் அமர்ந்து...
காகிதம் ஏற விருப்பம் தெரிவித்தன.

வார்த்தைகளை அனுப்பிய காற்றே...
காகிதம் பறித்து சென்ற போது...
ஏனோ இறுக்கி பிடிக்க மனமின்றி...
காற்றின் பாதையில் பறக்கவிட்டேன் காகிதத்தை.

என்னை பார்த்தபடி அமர்ந்திருந்த வார்த்தைகளை...
புறக்கணித்து.. உள் சென்று கதவடைத்து விட்டேன்.
நான் தவற விட்ட மழையில் நனைந்து...
கரைந்திருக்ககூடும் காத்திருந்த வார்த்தைகள்...

3.15.2009

வீட்டினுள்ளே!





நெஞ்சில் கனக்கும் அந்தச் சொற்களும்
என்னிடம் கனைக்கும் அந்த சொந்தம்
இவைகளாலே வீட்டினுள்ளே
காணாமற்போய்விட்டேன்

*****************************************

என் முன் சிரிக்கும் அதே வேளை
என் முதுகிலும் குத்தும் சொந்தங்கள்.
சுகம் கேட்டதில்லை என்னிடம்
தங்கள் சுமையைத்தான் கூறுவர்.

*****************************************

அமைதியில் நானிருந்தால் காதல் என்பர்
அதுவே ஆரவாரப்பட்டால்
யாரையோ பார்த்துவிட்டான் என்பர்.

*****************************************

தனிமையில் நானிருக்க தாய் என்று
ஆறுதல் யாருமில்லை.
தனாக வந்துசெல்லும் உறவுகளும்
கடைசியில் நான் யார் என்பர்

*****************************************

3.09.2009

முத்தம்



சத்தமே இல்லாத இந்த சாந்த வேளையில்
யுத்தமே வேண்டாம் நமக்குள்.
மொத்தமாய் உன் காதலை - எனக்கு
முத்தமாய்க் கொடுத்திடு.
சந்தமில்லாமல் வாங்கிக் கொள்வேன்.
உன் முத்தத்துடன் காதலை

இரவில் தனிமை



தனிமையில் வாழும் நேரங்களில்
அந்த நிலவுதான் என்னுடன் - துணை
உன்னைப்போல் என்னருகில்
உன் நினைவைத் தந்தவண்ணம்

12.29.2008

பிரிகின்ற ஆண்டு




எட்டாத விடயத்தை என்னால்
எட்டமுடிந்த காலமிது
கண்ணில் என்னவள் பட்டதும்
காதலெனைத் தொட்டதும் இங்கேதான்

காதலி வரவால் நெஞ்சம் பூவானது
அவள் பிரிவால் அதுவே புண்ணாணது
புண்ணாண மனதை பொன்னாக்க முயன்றேன்
அவை மீண்டும் மீண்டும் அவளுக்காய் மண்ணாகிறது

வரும்காலம் எப்படியெனத் தெரியாது
நம் வருங்காலமும் எப்பட்யெனத் தெரியாது
ஓயாத அலைகளாய் உன் நினைவுடன்
2008ற்கு விடைகொடுக்க காத்திருக்கிறேன்
ஆண்டிற்கு மட்டுமே என் விடை
என்னையாண்ட உனக்கல்ல!!!