
என் இதய நான்கு அறைகளிலும்
அழகி உன் புகைப்படம்தான்
சுழலும் சுவாசம் கூட ஒருமுறை
உன்னழகை பார்க்க வேண்டும் என்றுதான்
சுவாசிக்கும் காற்றிடம்
வரம் வேண்டுகிறேன்
உன் சுவாசத்தில் செல்லவும்
என்னைப் பற்றிச் சொல்லவும்
ம்ம்ம்.................
இன்றும் நீ என்
விழிகளில் விழவில்லை
என்றும் என் விழிகள்
உனக்காக காத்திருந்ததில்லை .
காரணம்.
என் உயிர் காக்கும் இதயமும்
சுழல்கின்ற சுவாசமும்
என்றும் உன்னையே சுற்றுவதால்.....